தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரையிலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்த வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் நடித்தவரும் திரைப்படத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து பிரப நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் தளபதி. இந்த படத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, மம்முட்டி ஆகிய இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள் இந்த திரைப்படத்தின் மூலம் தான் அரவிந்த்சாமி ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமானார்.இதன் மூலம் பிரபலமடைந்த இவர் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்த ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த பிரபலமடைந்த இவர் திடீரென தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ரீச்சினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் சில ஆண்டுகளாக ரஜினியுடன் இணைந்து அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது.
அந்த வகையில் தற்பொழுது ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் 120 படத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரையிலும் வெளிவரவில்லை என்றாலும் விரைவில் வெளியாகும் ஏன்னா எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் படத்தில் ரஜினிக்கு தம்பி அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் தான் அரவிந்த்சாமி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இவர்களுடைய கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.