ஆண் குழந்தைக்கு பெற்றோரான சின்னத்திரை ஜோடி.! வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்..

0
serial-actress

சமீப காலங்களாக சீரியல் பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வகையில் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே அளவிற்கு சின்னத்திரை பிரபலங்களுக்கும் கிடைத்து வருகிறது. இவ்வாறு சின்னத்திரை பிரபலங்களும் தங்களுக்கு என்ன ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் சீரியல்கள் நடிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் திருமணம் செய்து கொண்ட தங்களுடைய ஜோடிகளுடன் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.‌அந்த வகையில் சோசியல் மீடியாவின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் தான் தீபக் அபிநவ்யா.

இவர்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் சின்னத்திரை சீரியலில் ஒன்றாக நடித்து பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தீபக் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து அபிநயா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்த வருகிறார்.

கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்  அபிநவ்யா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை கேட்டிருந்தார். இவ்வாறு நிறைமாத கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து அபிநவ்யா கயல் சீரியலில் நடித்த வந்தார் இதுவரையிலும் இவருடைய கதாபாத்திரம் மாற்றப்படவில்லை.

abinavya
abinavya

இப்படிப்பட்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.  மேலும் அபிநவ்யா தொடர்ந்து கயல் சீரியலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களான இந்த தம்பதியினர்களுக்கு தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்.