முதன்முறையாக விஜய் டிவி நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா.. ஒரே நாளில் பிறந்த சுவாரசியமான தகவல்

jyothika
jyothika

Actress Jyothika: நடிகை ஜோதிகா முதன்முறையாக சின்னத்துரை நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜோதிகா தற்போது வரையிலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்பொழுது சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் தான் சரவணன் மீனாட்சி.

இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள் தான் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா ஜோடி. சரவணன் மீனாட்சி தொடர் மூன்று சீசன்களாக வெற்றிக்கரமாக ஓடிய நிலையில் முதல் சீசனில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்தனர். இதன் மூலம் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் திருமணத்திற்கு பிறகு செந்தில் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே மீண்டும் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். அப்படி தற்பொழுது அண்ணா என்ற சீரியலில் நடித்துவரும் நிலையில் இந்த தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு சீரியல்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வரும் மிர்ச்சி செந்தில் அண்மையில் பிஸ்கட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதாவது, அந்த விளம்பரத்தில் அவர் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை நடிகரும் இயக்குனருமான கிருஷ்ணா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பர சூட்டிங் என்பது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இவர் மேலும் ஒரு சுவாரசியமான தகவலையும் பகிர்ந்துள்ளார். அதாவது, அந்த விளம்பரத்தில் ஹீரோவாக நடித்த தனக்கும், ஹீரோயினாக நடித்த ஜோதிகாவுக்கும், இதனை இயக்கிய கிஷோருக்கு ஒரே நாளில் பிறந்த நாள் என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மூன்று பேரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.