sk16 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு.! அதுவும் எம்ஜிஆர் நடித்து ஹிட் ஆனா படத்தின் டைட்டில்

0

கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டியராஜ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார், கடைக்குட்டி சிங்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது இதற்கு காரணம் குடும்ப கதைதான், அதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக படத்தை கண்டு களித்தார்கள்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்திற்கு எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தின் டைட்டிலை வைத்துள்ளார்கள். எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தற்போது நடைபெற்று வருகிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் யோகிபாபு, சமுத்திரக்கனி, அனு இமானுவேல் ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள், படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் கலவையான விமர்சங்களை சந்தித்ததால் இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.