விஷாலின் 33 படத்தில் நடிப்பதிற்கு சம்பளத்தை குறைத்துக் கொண்ட எஸ் ஜே சூர்யா – வெளிவந்த உண்மை காரணம்.

தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக இருப்பவர் எஸ் ஜே சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் அதன் பின் நடிப்பில் தனது கவனத்தை திசை திருப்பினார் ஆரம்பத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் இல்லை என்பது ஒருவரது ஆனால் சிறிது இடைவெளிக்கு பின் நடிப்பில்  பின்னி பெடல் எடுத்து வருகிறாரார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாகவும், வில்லனாகவும் வெற்றி நடை கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் எஸ். ஜே,சூர்யாவுக்கு வில்லன் ரோல் கன கச்சிதமாக பொருந்தி உள்ளது இதுவரை அவர் மாஸ்டர்,  ஸ்பைடர், மாநாடு ஆகிய படங்களில் இவரது வில்லத்தனம் போற்றும் வகையில் இருந்து வந்துள்ளதால் பட வாய்ப்புகளும் தற்போது குவிந்த வண்ணமே இருக்கின்றன.

மேலும் கடைசியாக மாநாடு திரைப்படத்தில் இவர்  நடிப்பு வேற லெவல் இருந்தது. இப்பொழுது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது இதை உணர்ந்துகொண்ட எஸ். ஜே. சூர்யாவும் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். மாநாடு திரைப்படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் இனி அடுத்தடுத்த படத்திற்கு 2 கோடி சேர்த்து 6 கோடியாக வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது.

அதன்படி விஷால் நடிப்பில் உருவாகிவரும் 33வது திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யாவை படக்குழு கமிட் செய்தது முதலில் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை ஆனால் 2022 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திடீரென படக்குழு இந்த படத்திற்கு தலைப்பை வைத்துள்ளது ஆம் “மார்க் ஆண்டனி” என்ற தலைப்பில் படம் உருவாக இருக்கிறது இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார் எனிமி படத்தை தயாரித்த வினோத் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார்.

விஷாலின் 33வது திரைப்படமான மார்க் ஆண்டனி  படத்திற்கு முதலில் எஸ் ஜே சூர்யா சம்பளமாக 6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார் ஆனால் தயாரிப்பு நிறுவனமும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பின் கதையை கேட்டு உள்ளார் இவரது ரோல் சிறப்பாக இருந்த காரணத்தினால் 2 கோடியை குறைத்துக்கொண்டு 4 கோடி சம்பளம் கேட்டு உள்ளார் ஆனால் தயாரிப்பு நிறுவனமும் சற்று அதிகரித்து 5 கோடியாக சம்பளத்தை  கொடுப்பதாக கூறியது.

Leave a Comment