தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி பல புது படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் எந்தெந்த படங்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சமீப காலங்களாக தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட வருகிறது மேலும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களுக்காக மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
ருத்ரன்: தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.
சொப்பன சுந்தரி: ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலங்களாக கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சொப்பன சுந்தரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தினை எஸ்டி சார்லஸ் இயக்கியிருக்கும் நிலையில் விஷால் சந்திரசேகர் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
திருவின் குரல்: ஆக்சன் திரில்லர் படமான திருவின் குரல் படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தை ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்த ஆத்மிகா நடித்த இவர்களை தொடர்ந்து பாரதி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யானை முகத்தான்: யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யானை முகத்தான் திரைப்படத்தினை ரெஜிஷ் மிதிலா இயக்கியிருக்கும் நிலையில் இந்த படத்தில் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ரிப்பப்பரி: மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை அருண் கார்த்திக் இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் காவியா அறிவுமணி ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரசன்: விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள தமிழரசன் படத்தினை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார் மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் வருகின்ற 14ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
சாகுந்தலம்: நடிகை சமந்தா நடித்திருக்கும் பான் இந்திய படமான சாகுந்தலம் படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.