80 to 90களில் இருந்து இன்று வரை சினிமாவை ஆட்டி படைத்த ஆறு நடிகைகள்.! ஒவ்வோருத்தரும் வேற லெவல்

தற்போது சினிமாவில் பல நடிகைகள் அறிமுகம் ஆகி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர் ஆனால் 80ஸ் காலகட்டத்தில் இருந்து சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்த நடிகைகள் யார் யார் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஸ்ரீதேவி :- நடிகர் கமலுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. மூன்றாம் பிறை, 16 வயதினிலே ஆகிய திரைப்படங்கள் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி தற்போது மண்ணில் இல்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

மீனா:- தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை மீனா இவர் ரஜினிகாந்த் உடன் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சிம்ரன்:- நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தற்போது முன்னணி நடிகர்களாக இருந்து வரும் விஜய், அஜித், மாதவன், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது நயன்தாராவை போல் அந்த காலகட்டத்திலேயே நடிகர்களுக்கு செம்ம டாப் கொடுத்தார் நடிகை சிம்ரன். இவர் கடைசியாக மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரீ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜோதிகா:- 90 கலில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்தான் நடிகை ஜோதிகா. இவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் நடிகை ஜோதிகா புகழின் உச்சத்தில் இருக்கும்போது சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு சிறிது ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை ஜோதிகா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

திரிஷா :- தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை திரிஷா. ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளது. அதேபோல் இவர் ஏற்று நடித்த 96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள  பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில்நடித்துள்ளார்.

நயன்தாரா:- நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான o2 OTT யில் வெளியாகி மிகப்பெரிய அளவில் தோல்வி சந்தித்தது. அதன் பிறகு தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த வருகிறார். மேலும் பாலிவுட்டில் நயன்தாராவுக்கு முதல் திரைப்படமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment