தனது நடனத்தால் தென்னிந்திய சினிமாவை ஆட்டிப் படைத்த சிவசங்கர் மாஸ்டர் கொரோனா சிகிச்சை பலன் இன்றி காலமானார்..!

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடன இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் இவர் தன்னுடைய வாழ்நாளில் எண்ணூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் அந்த வகையில் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் கால் தடம் பதித்துள்ளார்.

அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜீத் தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இவர் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்தவகையில் இவர் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல்வேறு திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விஜயின் சர்க்கார் ஆகிய திரைப்படத்திலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் இதன்மூலமாக பல்வேறு தேசிய விருது தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது என பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

இப்படி புகழ்பெற்ற நமது நடன ஆசிரியருக்கு சமீபத்தில் கொரோனா தோற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  அந்த வகையில் இவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட வந்தது.

இந்நிலையில் அவருடைய மருத்துவ செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் அவருடைய மகன் அஜய் கிருஷ்ணா என்பவர் சமூகவலைதள பக்கத்தின் மூலமாக பலரிடம் உதவி கேட்டிருந்தார் இதனை தொடர்ந்து சிரஞ்சீவி சோனு சூட் தனுஷ் போன்ற திரை உலக பிரபலங்கள் உதவி செய்துள்ளார்கள்.

sivasankar-4
sivasankar-4

ஆனால் துரதிருஷ்டவசமாக தற்போது சிவசங்கர் மாஸ்டர் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள்.

Leave a Comment