“குக் வித் கோமாளி -3 ” செட்டில் பிரபல நடிகருடன் துள்ளல் ஆட்டம் போடும் சிவாங்கி – வெளிவந்த ப்ரோமோ.!

சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசன் சிறப்பாக ஒளிபரப்பானதை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் வித்தியாசமாக சமையல் தெரிந்த பிரபலங்களுடன் சமையல் தெரியாத காமெடி பிரபலங்களை இறக்கி புதுவித நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ் பெற்றது. மேலும் இதில் கலந்துகொண்ட பிரபலங்களும் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து சினிமா துறையிலும் சிறப்பாக பயணித்து வருகின்றன.  அந்த வகையில் ரம்யா பாண்டியன், அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ர லக்ஷ்மி போன்ற பல பிரபலங்களும் தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ், சிவாங்கி போன்றோரும் சில டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் ஆரம்பத்தில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் இதுவரை எலிமினேஷனில் இருந்து ரகுல் தாத்தா மற்றும் மனோபாலா ஆகிய இரு பிரபலங்கள் வெளியேறிய..

நிலையில் மற்ற போட்டியாளர்கள் சிறப்பாகச் சமைத்து வருகின்றனர். இந்த சீசனில் கோமாளிகள் வாரம் வாரம் புதுப்புது கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்துகின்றனர். இந்த நிலையில் அடுத்த வார குக் வித் கோமாளி மூன்றாவது சீசனின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இதில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், அதிதி ராவ், பிருந்தா மாஸ்டர் போன்றவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொண்டுள்ளனர். அதில் துல்கர் சல்மான் நடித்து வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகளை சிவாங்கி மற்றும் துல்கர் இணைந்து நடித்தனர்.

Leave a Comment

Exit mobile version