வசூலில் ருத்ர தாண்டவமாடும் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” – இதுவரை அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

அண்மைக்காலமாக தொடர்ந்தது வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.. அதிலும் இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தன.. இதனால் நாளுக்கு நாள் அவரது மார்க்கெட்டும்  அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இப்பொழுது கூட இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் இவர் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளிவந்து வெற்றி நடை கொண்டு வரும் திரைப்படம் பிரின்ஸ்.. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர்  அனுதீப் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கைகோர்த்து உக்ரைன் நாட்டு நடிகை மரியா, சத்யராஜ், சூரி, பிரேம்ஜி கங்கை அமரன்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் கடந்த 21 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம்..

இதுவரை எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை மட்டுமே 45 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்திருக்கிறதாம் தமிழகத்திலும் நல்ல வசூல் வேட்டை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் படைத்திருக்கிறது.

வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் மேலும் இது அவருக்கு மூன்றாவது வெற்றி இதன் மூலம் ஹாட்ரிக்  வெற்றியை அவர் ருசித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.

Leave a Comment