சிவகார்த்திகேயனின் மாவீரன் ரீ ஷூட்டிங்.! தயாரிப்பாளர் தலையில் துண்டை தூக்கி போட்டு ஓடியே அவலம்…

0
maaveeran
maaveeran

குறுகிய ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் திருப்தி தராததால் ரீ ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகளில் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது இந்த படத்தை முழுமையாக பார்த்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் திருப்தி தராததால் கதையில் சில மாற்றம் வேண்டும் என்று ரீ ஷூட்டிங் வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே மாவீரன் படத்தில் நடித்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனர் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆனால் அதை எல்லாம் சரி கட்டும் விதமாக அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி முட்டுக்கட்டை போட்டது இந்த நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ரீ ஷூட்டிங் எடுத்தால் தயாரிப்பாளர் என்ன செய்வார் என்று யோசிக்காமல் தன்னுடைய இஷ்டத்திற்கு செய்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்று கூறப்படுகிறது.

போன படம் தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று இப்படி ஒரு வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது இது உண்மையான தகவலாக வெளியாகவில்லை இது ஒரு வதந்தி என்றும் கூறப்படுகிறது.