100 கோடியை நோக்கி பயணிக்கும் சிவகார்த்திகேயனின் டான் – உலகம் முழுவதும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
don
don

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்துகொண்டு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவர் கடைசியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து இளம் இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி உடன் கை கொடுத்து நடித்த திரைப்படம் தான் டான்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து  பிரியங்கா அருள்மோகன், சூரி, சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி இருந்தது.

படம்  ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்த காரணத்தினால் நாளுக்கு நாள் இந்த படத்தை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் டான் திரைப்படம் ஹவுஸ்புல்லாக தான் திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் டான் படக்குழு எதிர்பார்க்காத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 48 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் 75 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது.

வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி நிச்சயம் 100 கோடி கிளப்பில் இணையும் என கூறப்படுகிறது ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் இந்த திரைப்படமும் இணையும் பட்சத்தில் அவரது சினிமா பயணம் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் அஜித் விஜய்க்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் இருப்பார் என்பதே சினிமா வட்டாரங்களில் கருத்தாக இருக்கிறது.