நீங்கள் எதிர்ப்பது போல் சிவகார்த்திகேயனின் “டான்” படம் இருக்காது.? அதுக்கும் மேல..படத்தின் கதை இப்படிதான் இருக்கும்.

சினிமா உலகில் பல நடிகர்கள் ஆக்சன் திரைப்படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடியும் ஆனால் மிகப் பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்த முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான் ஆனால் அதை தற்போது வரையிலும் செய்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படி கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதனால் தான் அவர் குறைந்த படங்களிலேயே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அதோடு அந்த படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி உள்ளனர் அந்தக் காரணத்தினால்தான் தற்போது சிவகார்த்திகேயனும் குறைந்த படங்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோவாக தற்பொழுது இருக்கிறார்.

அவர் நடிப்பில் வருகின்ற 9ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து டான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

வில்லனாக எஸ் ஜே சூர்யா காமெடியானாக குக் வித் கோமாளி சிவாங்கி, மிர்ச்சி விஜய் கெஸ்ட் ரோலில் இயக்குனர் கௌதம் மேனன் போன்றோர் நடித்து வருகின்றனர் ஒரு ஹீரோயிசம் காட்சிகள் இல்லாமல் ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமின்றி இந்த படம் பார்க்கும் பொழுது கண்டிப்பாக நம்முடைய கல்லூரி நினைவு கண் முன்னாடியே வந்து போகும் என்றும் கூறப்படுகிறது மேலும் இந்த படமும் எமோஷனல் காமெடி கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறதாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment