ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் சிவகார்த்திகேயனின் அயலான் பட வீடியோ.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் அவர் நடிக்கும் ஒரு சில முக்கிய திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருக்கும்.

மேலும் இவரது நடிப்பில் மாவீரன் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த அடுத்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் பலரும் அப்டேட் இருந்தால் வெளியிடுங்கள் என கேட்டு வந்த நிலையில்.

தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அயலான் திரைப்படத்தின் ஒரு சிறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது இது கிளிம்ஸ் வீடியோ தான் என்று தெரிந்தாலும் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பது போல் தெரிகிறது இதனை தொடர்ந்து பார்த்தால் அயலான் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை பற்றி ரசிகர்கள் பலரும் தெரிந்து கொள்வதற்காக ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் மிகவும் கம்மியான சம்பளம் வாங்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களுக்கு மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கி வருவதாகவும் ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகிவிட்டால் நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் அதிகம் சம்பளம் வாங்க வாய்ப்பிருக்கிறது எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment