விஜய் அஜித்திற்கு திருநீர் போட்ட சிவகார்த்திகேயன்..! பிரின்ஸ் வெளியாகும் முன்பே 100 கோடி வசூலா..?

தமிழ் சினிமாவில் தற்பொழுது விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வரும் ஒரு நடிகர் என்றால் அவர் சிவகார்த்திகேயன் தான் தற்பொழுது இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பாராத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமான வெற்றியை கொடுப்பது மட்டுமில்லாமல் அவர் முன்னணி நடிகராக வலம் வர வழி வகுத்துள்ளது.

மேலும் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் முதலீட்டை விட பல கோடி வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான டான் என்ற திரைப்படம் உலகளவில் சுமார் நூறு கோடி அளவில் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தான் தமிழ் சினிமாவில் மட்டும் பிரபலமானால் போதாது என்பதற்காக தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிரின்ஸ் என்ற திரைப்படத்தை வெளியிட உள்ளார் மேலும் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் ஒரு சில வெளியாகி கொண்டு இருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சுமார் 90 கோடிக்கு மேலாக வியாபாரம் ஆகி உள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் தெலுங்கிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை தந்துவிட்டால் முதல் 100 கோடி வியாபாரமான திரைப்படம் இதுதான் என குறிப்பிடப்படுகிறது.

siva karthikeyan-1
siva karthikeyan-1

எது எப்படியோ தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் கதை எப்படி இருக்கிறது இல்லையோ அவருடைய காமெடியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கண்டிப்பாக தியேட்டரில் அலைமோதும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment