தொடர் வெற்றியை தொடர்ந்து சிக்கலில் சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்..! மீண்டு வருவாரா..?

sivakarthi
sivakarthi

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருக்கு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள்  சமீபத்தில் நடித்துள்ள பிரின்ஸ் என்ற திரைப்படம் கூட வருகின்ற தீபாவளிக்கு அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்க போகும் அடுத்த திரைப்படத்திற்கான டைட்டில் மற்றும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது

அதுமட்டுமில்லாமல் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த வீடியோவில் மாவீரன் என்ற டைட்டில் இடம் பெற்றுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் சுட ஆரம்பித்து விட்டார் என கேலி செய்து வருகிறார்கள் ஏற்கனவே சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் கூட ரஜினியின் டைட்டில் தான்.

அந்த வகையில் முதலில் தனுஷ் தான் ரஜினிகாந்தின் டைட்டிலை வைத்து திரைப்படம் நடித்து வந்தார் ஆனால் தற்பொழுது சிவகார்த்திகேயனும் அதையே பின்பற்றி வருகிறார் அது மட்டும் இல்லாமல் அந்தப் படத்தில் ரஜினி போலவே சிவகார்த்திகேயன்  இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை மூட்டி உள்ளது.

சுமார் 1987 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் மாவீரன் என்ற திரைப்படம் வெளியானது அதன் பிறகு மகதீரா என்ற திரைப்படம் வெளிவந்த நிலையில் இப்பொழுது மூன்றாவது முறையாக மாவீரன் என்ற டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிவந்த தகவலின் படி சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு சில பிரச்சனைகள் எழும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால் இந்த திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்ற காரணத்தினால் இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படலாம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.