கடனை அடைக்க தெலுங்கு சினிமா பக்கம் போகும் நடிகர் சிவகார்த்திகேயன் – இவரது நிலைமை இப்படி ஆகிப்போச்சே.! வருத்தப்படும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் சிறப்பான திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்தும், தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி  லாபத்தை அள்ளி நாளும் சிவகார்த்திகேயன் பல்வேறு கடன்களில் சிக்கித் தவிக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை. இவ்வளவு லாபம் அள்ளியும் இன்னும் கடன் தீர்ந்தபாடில்லையாம்.

கடனைத் தீர்க்க நடிகர் சிவகார்த்திகேயனும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் டான் திரைப்படத்தில் நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சிங்கப்பாதை படத்திலும் நடிக்கிறார் இப்படியிருக்க திடீரென தெலுங்கு படத்தில் ஒன்றிலும் இவர் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்னும் இருபத்தி ஏழு கோடி கடன் இருக்கிறதாம் அதனால் வீட்டில் சும்மா இருக்கக்கூடாது என்பதற்காக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிக்கும் படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக இருக்குமாம் இந்த படத்தில் அவர் ஒரு டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார்.  இந்த படத்தில் எமி ஜாக்சன் போன்ற ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை நடிக்க வைக்க தற்போது படக்குழு தேடி வருகிறதாம்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்  மற்றும் சென்னையில் ஆகிய இடங்களில்  படமாக்க இருக்கிறதாம் நடிகை கிடைத்தவுடன் படத்தை ஆரம்பிக்க ரெடியாக இருக்கிறது அப்படி பார்த்தால் இந்த படம் ஜனவரி 18ஆம் தேதி சூட்டிங் தொடங்கும் என தெரிய வருகிறது.

Leave a Comment

Exit mobile version