முன்னணி இயக்குனர்களை மதிக்காத சிவகார்த்திகேயன் – நாலு காசு சம்பாதிக்க இவங்க போதும்..!

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்திருந்தாலும் போக போக கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்ததால் அவரது திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்த தொடங்கியது.

இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் அதிகரித்தது அதன் காரணமாக தனது சம்பளத்தை ஒவ்வொரு படம் முடியும் பொழுதும் கணிசமாக உயர்த்தி கொண்டார். இப்படி நடிப்பதன் மூலம் அதிகம் சம்பாதித்தாலும் மறுபக்கம் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தி வருகிறார்.

சிறந்த கதைகளை புது முக இயக்குனர்கள் வைத்திருந்தால் அதில் தயங்காமல் இவரே நடிப்பது, அந்த படங்களை தயாரிப்பதும் வழக்கம் அந்த வகையில் நெல்சன் திலீப் குமாருடன் டாக்டர், சிபி சக்கரவர்த்தி உடன் டான் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார். இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

இப்படி புதுமுக இயக்குனர்களுக்கு தேடி தேடி வாய்ப்பு கொடுக்க காரணம் புதுமுக இயக்குனர்கள் சம்பளம் குறைவாக கொடுத்துவிட்டு படத்தின் வசூல் மூலம் நல்ல காசு பார்க்கிறார் ஒரு இளம் இயக்குனருக்கு ஒரு தடவை தான் வாய்ப்பு தருவாராம் அடுத்த தடவை தர மாட்டார் என சொல்லப்படுகிறது காரணம் இயக்குனர்களும் ஒன்று இரண்டு படங்கள் வெற்றி பெற்றாலே சம்பளத்தை உயர்த்திக் கொள்கிறார்களாம்.

இதனால் சிவகார்த்திகேயன் இளம் இயக்குனருக்கு முதல் வாய்ப்பை மட்டும் தருவாராம் அதன் பிறகு இழுபறியில் போட்டு விடுவார் என சொல்லப்படுகிறது. மேலும் ஒரு சில முன்னணி இயக்குனர்களுக்கு கூட வாய்ப்பை தர மறுக்கிறார் அந்த வகையில் சிவகார்த்திகேயனை சினிமா உலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜிக்கு கூட கால் சீட் கொடுக்காமல் இழுத்து அடிக்கிறாராம். நாலு காசு வந்ததும் போதும் பழசை எல்லாம் சிவக்கார்த்திகேயன் மறந்து விடுகிறார் என கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment