கால்ஷீட் தராத சிவகார்த்திகேயன் வேற மாதிரி மடக்கிப் போட்ட தயாரிப்பாளர்.! நடத்த உண்மை சம்பவம்.?

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரையிலும் மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு கதைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருந்து கொடுப்பதால் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் கூட்டத்தை திரையரங்குகளுக்கு வரவழிப்பதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

இதனாலேயே தமிழ் சினிமாவில் குறைந்த படங்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் விசுவரூபம் எடுத்து உள்ளார். சமிபத்தில் டாக்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் நல்லாவே கல்லா கட்டுகிறது. இதனால் இவரை வைத்து எடுக்க பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு தயாரிப்பாளர் பலமுறை உங்கள் படத்தை நான் தயாரிக்க வேண்டுமென கால்ஷீட் கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு முதலில் நாசுக்காக மறுத்தார் சிவகார்த்திகேயன். ஆனால் தயாரிப்பாளர் பலமுறை கேட்டும் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தனது மூளையை யூஸ் பண்ணி சிவகார்த்திகேயனை மடக்கி போட்டுள்ளார்.

டாக்டர் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியிடவர்தற்கு முன்பாக ஒரு பிரச்சனையை சந்தித்தது படக்குழு. அப்பொழுது படத்தை வெளியிட வேண்டுமென்றால் 27 கோடி ரூபாய் தந்தால் மட்டுமே படத்தை வெளியிடுவேன் என தயாரிப்பாளர் ஒரு பிரச்சனையை செய்துள்ளார்.சிவகார்த்திகேயனுக்கு மதுரை அன்பு 27 கோடி ரூபாய் கொடுத்து டாக்டர் படத்தை வெளியிட உதவி செய்தார் இவர் ஏற்கெனவே சீமராஜா படம் வெளிவருவதற்கு பணம் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த பணத்தை கொடுத்துவிட்டு எனக்கு ஒரு உதவி செய்யும்படி சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். என்னவென்றால் உங்கள் படத்தின் கால்ஷீட் எனது நண்பருக்கு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார் அந்த நபர் யார் என்று பார்த்தால் சிவகார்த்திகேயனிடம் ஏற்கனவே தயாரிப்பாளராக இருந்து பல முறை கால்சீட் கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்துள்ளதாம். ஏதோ ஒரு விதத்தில் அவர் எனக்கு உதவி செய்து விட்டார் உங்களுக்கு நிச்சயம் காட்சி தருகின்றனர் சிவகார்த்திகேயனும் ஒப்புக் கொண்டுள்ளார். எப்படியே அந்த தயாரிப்பாளர் தனது மூளையை யூஸ் செய்து சிவகார்த்திகேயனை மடக்கி விட்டார். இந்த செய்தியே தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.