இறங்கி செம குத்து குத்தும் சிவகார்த்திகேயன்.! மாஸாக வெளியான மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிப்ஸ் வீடியோ…

விஜய் டிவியிலிருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வி எப்படி சரி கட்ட போகிறார் என்று எதிர்பார்ப்பதற்குள் அடிமேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது மிகத் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து படகுழு தற்போது வெளியிட்டு இருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதையில் நிறுத்தப்பட்டது எனவும் தயாரிப்பு நிறுவனம் பாதியில் விலகி விட்டதாக வதந்திகள் வெளியாகி இருந்தது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் கிளிப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் இறங்கி குத்து டான்ஸ்ஸில் கலக்கி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற 17ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படத்தின் மூலம் தோல்வியை சந்தித்து மிகப் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து இருந்தார். பிரின்ஸ் திரைப்படத்திற்கு முன்பாக வெளியான டான் திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி குவித்து இருந்தது இதனை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் மாவீரன் திரைப்படம் எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் போராடி வருகிறார்.

அது மட்டுமில்லாமல் நடிகை அதிதி சங்கருக்கு இதுவே இரண்டாவது படமாக இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவரின் முதல் படமான விருமன் திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இரண்டாவது படமான மாவீரன் திரைப்படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்.

Leave a Comment