வசூலில் கில்லியாக மாறிய சிவகார்த்திகேயன்.! எப்படி சொல்லி அடித்தார் பார்த்தீர்களா.!

விஜய் டிவியில்  தொகுப்பாளராக பணியாற்றி இப்போது தமிழ் நடிகர்களின்  முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுக் கொடுத்தது.

மேலும் இந்த டாக்டர் திரைப்படம் சுமார் 100 கோடி வசூலை தாண்டி வசூல் பெற்று தந்தது. மேலும் சமீபத்தில் சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டான்.  இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா சிவாங்கி போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படம் மே 13ஆம் தேதி உலகமெங்கும் திரை உலகில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இந்த டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுத் தந்ததால் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 11 கோடி வசூலுக்கு மேலாக வசூல் பெற்றது. அதன்பிறகு 12 நாளிலே இந்த திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் டாக்டர் திரைப்படத்தின் 100 கோடியை 11 நாளில் முறியடித்து சாதனை படைத்தது. மேலும் லைக்கா நிறுவனம்  பயங்கர சந்தோசமாக இருந்து வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படம் 100 கோடியை தாண்டியது அவரது மார்க்கெட் எகிறி விட்டது.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு நிறைய திரைப்படங்கள் வாய்ப்பு வந்து குவிந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெரிய பெரிய நிறுவனங்கள் சிவகார்த்தியன் படம் தயாரிக்க நீ நான் என போட்டி போட்டு வருகிறார்கள்.

Leave a Comment