தனுஷுடன் நடித்தால் திருவோடுதான் தூக்க வேண்டும்..! பிரபல நடிகைக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திகேயன்..!

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

மேலும் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இயக்குனர் செல்வராகவன் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் இந்த இரண்டு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ளது.

அதேபோல சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி.  இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கான கதாநாயகி தேர்வு செய்யப்பட்டு வருகிறது அதற்காக முதலில் பிரியங்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தன ஆனால் அவர் தனுஷுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன் பிறகு நடிகை கீர்த்தி ஷெட்டியை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளார் ஆனால் இப்படி ஒரு நிலையில் பிரியங்கா அருள்மோகன் இந்த திரைப்படத்தில் நடிக்காமல் போனதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் பிரியங்கா சிவகார்த்திகேயனுடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் மெகா ஹிட் கொடுத்துள்ளார் அந்த வகையில் தனுஷுடன் நீங்கள் நடித்தால் மார்க்கெட் குறைந்துவிடும் என்று கூறி அவருடைய மன நிலையை மாற்றி விட்டார் என கூறப்படுகிறது அது மட்டுமில்லாமல் எந்த ஒரு வளரும் நடிகையும் அவருடன் ஜோடி போட மாட்டார் என கூறி உள்ளார்கள்.

அதன் பிறகுதான் தனுஷ் படத்தில் பிரியங்கா நடிக்க முடியாது என கூறியதாக செய்திகள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.