பச்சை துரோகத்தை செய்தவர் சிவகார்த்திகேயன்.! இந்த ஜென்மத்தில் அவருக்கு இசையமைக்கமாட்டேன்.! பகீர் கிளப்பிய D.இமான்

Sivakarthikeyan vs D. Imman: நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் டி இமான் கூறியதை அடுத்து இமானின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அப்படி அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அயலான் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. சின்னத்திரையில் போட்டியாளராக அறிமுகமாகி தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர்தான் சிவகார்த்திகேயன்.

பச்சை துரோகத்தை செய்தவர் சிவகார்த்திகேயன்.! இந்த ஜென்மத்தில் அவருக்கு இசையமைக்கமாட்டேன்.! பகீர் கிளப்பிய D.இமான்

இவர் நடிப்பில் ஆரம்ப காலகட்டத்தில் வெளியான மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, சீம ராஜா போன்ற படங்கள் ஹிட் அடித்தது. மேலும் இந்த படங்களில் இடம்பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் மனங்கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததற்கு காரணம் டி இமான் தான் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு துணையாக நின்றவர் டி இமான் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துள்ளனர். இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயனுடன் இனி ஜென்மத்தில் சேர்ந்து பயணிப்பது கிடையாது அவர் எனக்கு செய்த்து பெரிய துரோகம் அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு வேலை இசையமைப்பாளராகவும் அவர் நடிகராக இருந்தால் வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கலாம்.

பூர்ணிமாவை சரமாரியாக வார்த்தைகளால் தாக்கும் விஷ்ணு.. ஒரு காபி கேட்டது குத்தமாடா..

மேலும் இந்த துரோகத்தை நான் தாமதமாக தான் புரிந்து கொண்டேன். அதுவரை என்னிடம் அவர் அன்பாக பேசிக்கொண்டு இருந்தார் அதன் பின்னர் தான் அவர் எனக்கு செய்த துரோகம் தெரியவந்தது எனக்கு எப்படி துரோகம் இழைக்க உனக்கு மனம் வந்தது என்று சிவகார்த்திகேயனை நான் பலமுறை கேட்டு இருந்திருக்கிறேன். அதற்கு அவர் சொன்ன பதிலை நான் இந்த இடத்தில் சொல்ல முடியாது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அதை மூடி மறைக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

இவ்வாறு இதன் காரணத்தினால் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என டி இமான் கூறியது குழந்தைகளின் எதிர்காலம் எனவும் கூறிய நிலையில் டி இமான் மனைவியை விவாகரத்து செய்ததற்கும் சிவகார்த்திகேயன் தான் காரணமாக இருக்கும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து விரைவில் உண்மையான தகவல் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.