தன்னுடைய வளர்ச்சிக்காக “அதிதி ஷங்கரை” பயன்படுத்திகொள்ளும சிவகார்த்திகேயன்..? பெரிய லிஸ்ட்டே வச்சிருக்காரு…

0
maveeran
maveeran

நடிகர் சிவகார்த்திகேயன் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் படமாக இருந்து வருகின்றன. அதனால் சிவகார்த்திகேயனின் அடுத்த அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது அந்த வகையில் மாவீரன் படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் லுக் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது மேலும் இந்த படத்தில் அறிமுக நடிகை அதிதி ஷங்கர் கமிட்டாகி உள்ளது இந்த படத்திற்கு பிளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. மாவீரன் படத்தில் அதிதி சங்கர் கமிட்டாக அவரது திறமை ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும்.. மறுபக்கம் வேறு சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது அது குறித்து தற்பொழுது ஹாலிவுட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கின்றன.

அது என்னவென்றால் சிவகார்த்திகேயனின் 25வது படம் வெகு விரைவிலேயே உருவாக இருக்கிறது அந்த 25 ஆவது படம் மிகப்பெரிய ஒரு படமாக இருக்க வேண்டும் அதாவது சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தை.. ராஜமௌலி அல்லது சங்கருடன் கைகோர்த்தால் சிறப்பாக இருக்கும் என கணக்கு போட்டு இருக்கிறாராம்.

அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அதிதி சங்கருக்கு இந்த வாய்ப்பை அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு தகவல் என்னவென்றால் புதுமுக நடிகைகளுக்கு அதிக காசுகளை அள்ளித்தர தேவையில்லை பட வாய்ப்பு கொடுத்து விட்டு கொஞ்சம் காசு கொடுத்தால் போதும்.

அதேபோல பிரமோஷன் பிரம்மாண்டமாக செய்ய முடியும் ஏனென்றால் அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் ப்ரொமோஷனுக்கு அவரது அப்பா ஷங்கர் கலந்து கொள்வார் இதனால் படம் பெரிய அளவில் ரீச் ஆகும் என்பதை கணித்து கூட இதை சிவகார்த்திகேயன் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றன இப்படி பல்வேறு விதமாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.