அதிக வசூல் செய்த சிவகார்த்திகேயனின் டாப் 5 திரைப்படங்கள்.! இதோ வசூல் நிலவரம்..

0

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரை என்டர்டைன்மென்ட் நடிகர் என பலரும் அழைப்பார்கள் ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இவரை பிடிக்கும்.

நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் சின்னத்திரையில்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தன்னுடைய விடாமுயற்சியால் படிப்படியாக வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார். வெள்ளித்திரையில் தனது விடாமயற்சியால் அடுத்தடுத்து படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டார்.

இப்படி இருக்க சிவகார்த்திகேயன் சமீபகாலமாக நடித்து வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இந்த நிலையில் எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என வைராக்கியத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

மேலும் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் ஐந்து திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை இங்கே காணலாம்.

நம்ம வீட்டு பிள்ளை-64 கோடி, வேலைக்காரன்-58 கோடி, ரெமோ-50 கோடி, ரஜினிமுருகன்-45 கோடி, சீமராஜா-41 கோடி.