சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் படம் தான் பராசக்தி. வரும் பொங்கலுக்கு இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது.
இது ஒரு ஸ்பெஷல் என்றால் ஜனநாயகன் படமும் பொங்கலை முன்னிட்டு வருவது கூடுதல் ஸ்பெஷல். இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக கல்லாகட்டும் என்ற ஆர்வம் இப்போது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் இருக்கிறது.
வெளியீட்டு தேதி முன்ன பின்ன இருந்தாலும் கூட போட்டி, போட்டி தான் என இரு நடிகர்களின் ரசிகர்களும் படத்தின் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று பராசக்தி படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது. அதாவது மிகப்பெரும் பொருட்செலவில் 60 காலகட்ட கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது.
இதற்காக அந்த காலகட்டத்தை அப்படியே கொண்டு வந்து தத்ரூபமாக படத்தை எடுத்துள்ளனர். அதை அப்படியே கண்காட்சியாக மக்களுக்கு காட்டும் வகையில் பட குழு ஏற்பாடு செய்திருக்கிறது.
அந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் பராசக்தி நிச்சயம் பவராக இருக்கும். ஸ்டுடென்ட்ஸ் எவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் என்பதை இப்படம் காட்டும். அது படம் பார்ப்பவர்களும் உணர முடியும்.
அதே போல் இப்படம் காதல் அன்பு பாசம் புரட்சி வீரம் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். மொத்தத்தில் பொங்கலுக்கு சிறப்பாக கொண்டாட கூடிய தரமான படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆர்வத்தின் உச்சியில் இருந்த அவருடைய ரசிகர்கள் தற்போது படத்திற்காக மரண வெய்ட்டிங்கில் உள்ளனர்.