சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளுக்காக சர்பிரைஸ் செய்த சிவகார்த்திகேயன்!! வைராலாகும் புகைப்படம் .!

Sivakarthikeyan surprises superstar Rajini on his birthday Viral photo: தமிழ் திரை உலகில் தனது நடிப்பு திறமையால் உலகமெங்கும் ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பவர் ரஜினி இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே தற்போது வரை நடித்து வரும் எல்லா திரைப்படங்களும் திரையரங்குகளில் பாதிக்கு பாதியாக வெற்றி அடையும் என்பது பலருக்கும் தெரியும்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முத்து இந்த திரைப்படம் ஜப்பானில் வெளியானபோது ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் ஜப்பானில் உள்ள பல ரசிகர்களை கவர்ந்து விட்டது.

மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது அண்ணாத்த  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

பொதுவாகவே ரஜினியின் பிறந்த நாளை வருடம் வருடம் அவரது ரசிகர்கள் காமென் டீபி வைத்து கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த வருடம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினிக்காக ஒரு புதிதான காமென் டீபை உருவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment