அஜித்தை சீண்டிப் பார்க்கும் சிவகார்த்திகேயன்.! தொடர் வெற்றியால் இப்படி ஒரு விபரீத முடிவா எடுக்கும் SK.

நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் அண்மைக்காலமாக வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடிக்கின்றன. அந்தவகையில் கடைசியாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் கல்லூரி கலாட்டா, காமெடி, காதல் போன்ற அனைத்தும்..

கலந்து ஒரு வித்தியாசமான படமாக இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடித் தீர்த்து வந்தனர்.  படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அவரது 20ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை இயக்குனர் அனுதீப் இயங்கி வருகின்ற நிலையில் அண்மையில் படத்தின் டைட்டிலுடன் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் வைரல் ஆகியது.  இந்த படத்திற்கு பிரின்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு

காரைக்கால் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது படம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று வருகிறது என்பது தெரியவருகிறது.  இந்த நிலையில் இன்று காலை பிரின்ஸ் படம் குறித்த முக்கிய தகவல் வெளிவந்துள்ளது அதன்படி பிரின்ஸ் படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தீபாவளியன்று அஜித்தின் 61வது படம் மற்றும் கார்த்தியின் சர்தார் படம் மற்றும் ஜெயம்ரவியின் இறைவன் படம் போன்ற முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில் தற்போது தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் படத்திற்கு இணையாக  சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ஓடும் என தெரியவருகிறது

Leave a Comment