இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியில் முருகதாஸ் படத்திற்கு ரெடியான சிவகார்த்திகேயன்.. SK 23 அப்டேட்.!

Sivakarthikeyan SK 23 movie update: சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் படப்பிடிப்புகளை முடித்திருக்கும் நிலையில் இதனை அடுத்து இவருடைய எஸ்கே 21 படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இந்த படத்தினை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தினை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கம் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

எனவே SK 23 டைட்டிலுடன் கூடிய படத்தின் ஷூட்டிங் வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலைக்கி வரும் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக கெத்து காமித்து வருகிறார் அப்படி இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இப்படத்தினை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்க ராஜ்கமல் ப்ளீஸ் நிறுவனம் தயாரித்து வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த படத்தின் ஷூட்டிங் இதுவரையிலும் முடியாமல் இருக்கும் நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 23வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த படத்தினை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன்4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் இசையமைப்பாளர் டி இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் இனிமேல் அவரது படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

எனவே இந்த சர்ச்சை இதுவரையிலும் முடியாமல் இருக்கும் நிலையில் விரைவில் SK 23 படத்தின் ஷூட்டிங் தொடங்க முடிவு செய்துள்ளாராம். மேலும் டிசம்பர் மாதமே SK 23 சூட்டிங் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் சர்ச்சைகளில் இருந்து திசை திருப்புவதற்காக SK 21 டைட்டில் அப்டேட் விரைவில் வெளியிவும் சிவகார்த்திகேயன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது