“சிக்ஸ் பேக்” வைத்த சிவகார்த்திகேயன்.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.! இனி தான் ஆட்டம் ஆரம்பம்

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அப்படி இவர் நடித்த டாக்டர், டான் படம் 100 கோடி வசூல் அள்ளியது.

(பிரின்ஸ் சுமாராக ஓடியது) அதன் பிறகு மடோன் அஸ்வினுடன் கைகோர்த்து இவர் நடித்த மாவீரன் திரைப்படமும் பெரிய வெற்றியை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரன் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான கான்செப்ட் அதிலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் பின்னி படல எடுத்தார்.

அவருடன் இணைந்து அதிதி ஷங்கர், சுனில், மிஷ்கின், யோகி பாபு, சரிதா என பலரும் சூப்பராக நடித்திருந்தனர் அதனால் படம் நல்ல விமர்சனத்தை பெற்று அதிக நாட்கள் ஓடியது இதுவரை மட்டுமே 80 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் OTT தளத்திலும் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படம் சூப்பராக கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இதற்கான அதிகாரமான அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது இந்த நிலையில் எஸ் கே 21 படத்திற்காக சிவகார்த்திகேயன் அதிரடியாக ரெடியாகி வருகிறார் ஆம் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாமல் இந்த படத்திற்காக அவர் “சிக்ஸ் பேக்”  உடம்பை  வைக்க  வருகிறார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்பொழுது ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது மேலும் இந்த படத்திற்கான அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.  இதோ நீங்களே பாருங்கள்.

Actor sivakarthikeyan
Actor sivakarthikeyan

Leave a Comment