20 – வது திரைப்படத்திற்காக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்க ரெடியாக இருக்கும் சிவகார்த்திகேயன் – ஷாக்கான படக்குழு.

0

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் அவரது படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளதால் இவரது திரைப்படங்கள் நல்லதொரு ஹிட் அடிக்கின்றன.

அதன் காரணமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் அஜித், விஜய், தனுஷ் அவர்களுக்கு அடுத்ததாக இவரது பெயர் சிறப்பாக தமிழ் சினிமாவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் காதல், காமெடி ஆகிய படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் அண்மையில் கூட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்த இவர் நடித்த டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு பேரையும், புகழையும் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 100 கோடி வசூலித்து புதிய சாதனைப் படைத்தது.

மேலும் சிவகார்த்திகேயனின் கேரியரில் இந்த படமும் 100 கோடியை தொட்டது இதுவே முதல் முறையாகும் இதனால் அவர் சந்தோஷத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்களிலும் சந்தோஷமா அதேசமயம் கடினமாகவும் நடித்து வருகிறார்.

டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது கையில் டான், அயலான், சிங்கப் பாதை போன்ற படங்கள் இருக்கின்றன. இது இப்படியிருக்க தெலுங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடிக்க இருக்கிறார் அந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருக்கிறார் இது சிவகார்த்திகேயனுக்கு 20வது திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சற்று சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது ஆம் தனது 20-வது திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சுமார் 25 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.