அந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு நயா பைசா கூட சம்பளம் தேவையில்லை சிவகார்த்திகேயனின் அறிவிப்பால் மிரண்டுபோன படக்குழு.

0

தமிழ் சினிமா உலகில் மிகவும் வேகமாக முன்னணி நடிகர் இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன், இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு சம்பளமே தேவையில்லை என கூறியது ரசிகர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது உள்ள நடிகர்களில் பெஸ்ட் என்டர்டைன்மென்ட் ஹீரோ என பெயரெடுத்தவர் அந்த அளவுக்கு அவரின் துறு துறு நடிப்பு நகைச்சுவைவை பேச்சும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது, இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, தொடர் தோல்வியை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் மிக முக்கிய படமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு சுமார் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன ஆனால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்பளமே வேண்டாம் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு படக்குழு மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அது என்ன திரைப்படம் தெரியுமா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் தான் அது, இந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது மேலும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக எனக்கு சம்பளம் வேண்டாம் என சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியுள்ளார், இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு இதுவரை 75% முடிந்துவிட்டதாகவும் ஜனவரி மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்கள் படக்குழு. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இந்த வருடம்  கண்டிப்பாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.