இனிமே என்னுடைய சம்பளம் இதுதான் ஒரேடியாக உயர்த்திக் கொண்ட சிவகார்த்திகேயன்.! அதுக்குன்னு இத்தனை கோடியா வாய்பிளக்கும் தயாரிப்பாளர்கள்.!

0

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. சிவகார்த்திகேயன் திரைப்படத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி பார்க்கிறார்கள். அதனால் குழந்தைகளிடம் சிவகார்த்திகேயனுக்கு தனியிடம் இருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நேரடியாக ott இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களாக கருதப்படுகிறது மேலும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப்  கேவி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்திற்காக தான் சிவகார்த்திகேயன் 30 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் லிஸ்டில் இணைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்.

தற்பொழுது அவரின் அசுர வளர்ச்சி தான் சினிமாவில் பல இளம் நடிகர்களுக்கு ஊன்றுகோலாக இருந்து வருகிறது மேலும் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் இளம் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.