பிரபல டாப் நடிகைக்காக சம்பளத்தையே விட்டுக் கொடுத்து நடிக்க ரெடியாக சிவகார்த்திகேயன்.? நயன்தாரா, ஹன்ஷிகா இல்ல.. அதுக்கும் மேல..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் பல வெற்றி / தோல்விகளை கடந்து படிப்படியாக முன்னேறி தற்போது ஜொல்லிக்கின்றனர் ஆனால் இப்பொழுது இருக்கும் நடிகர்கள் பலரும் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொண்டு தான் படங்களிலேயே நடிக்க ஆரம்பிக்கின்றனர்.

அந்த வகையில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு காமெடி, ஆக்ஷன் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் நடிக்கின்ற திரைப்படங்கள் அனைத்துமே நல்லதொரு வெற்றியை ருசித்து உள்ளதால் படத்திற்கு படம் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது ஏன் இப்போது கூட ஒரு படத்திற்கு சுமார் 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

சினிமா உலகை பொறுத்தவரை தனது படங்களில் டாப் நடிகர், நடிகைகளை வைத்து நடித்தால் இவரது மார்க்கெட் உச்சத்தை எட்டும் அதை சரியாக புரிந்து கொண்டு சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, ஹன்சிகா போன்றவர்களுடன் நடித்த தனது மார்க்கெட்டை பெருமளவில் ஆரம்பத்தில் உயர்ந்துகொண்டே தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்த தோடு மட்டுமல்லாமல் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கையில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன முதலாவதாக வருகின்ற மார்ச் 25-ம் தேதி  நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அதை தொடர்ந்து அடுத்ததாக அயலான் மற்றும் தெலுங்கு படம் என அடுத்தடுத்து கைவசம் வைத்திருக்கிறார்.முதல் முறையாக தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் முதலில் அங்கு பிரபலமடைந்த நடிகையுடன் ஜோடி போட்டு நடித்தால் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை கருத்தில் கொண்டு தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும்.

சாய்பல்லவியை தன்னுடன் நடிக்க வைத்தால் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட முடியும் மேலும் தெலுங்கிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி நிலைத்து நிற்க முடியும் என சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளார. சாய்பல்லவி சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் பட்சத்தில் தனது சம்பளத்தை கூட அவர் விட்டுக்கொடுத்து இந்த படத்தில் நடிக்க ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment