பெரிய இடத்திலிருந்து சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கும் தலைவலி.! அதுக்குன்னு நாளா பக்கமுமா…! இனி ஒரே வழி இதுதான்

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மூன்று, மனங்கொத்தி பரவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே காக்கி சட்டை, ரஜினி முருகன், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல விமர்சனங்களை பெற்றது இதனைத் தொடர்ந்து தற்பொழுது பிரண்ட்ஸ் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்துடன் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் மோத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் இருவது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் இணைந்தார். பிரண்ட்ஸ் திரைப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளார். தீபாவளி ரேசில் சிவகார்த்திகேயனின்  பிரண்ட்ஸ் திரைப்படமும் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் இணைந்து மோத இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

மேலும் சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படத்திற்கு காலை ஐந்து மணி காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறார்கள் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ரிலீஸ் உரிமையை சுரேஷ் ப்ரோடக்சன் பார்க்க இருக்கிறது அதேபோல் சர்தார் திரைப்படத்தினை மட்டும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது இதனால் ப்ரண்ட்ஸ் திரைப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்களிடம் அதிக காட்சிகள் கொடுக்கக் கூடாது என பெரிய இடத்தில் இருந்து அறிக்கை வந்துள்ளது.

பிரண்ட்ஸ் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுத்தால் சர்தார் திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாணம் கூறி வருவதாக தகவல் கிடைத்தது இதை மீறியும் நீங்கள் அதிக திரையரங்குகள் கொடுத்தால் பெரிய திரைப்படங்கள் உங்களுக்கு வழங்கப்படாது என மிரட்டி வருகிறார்களாம்.

இந்த நிலையில் முதல் நாள் வசூலில் பிரெண்ட்ஸ் திரைப்படத்திற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.