மீண்டும் 100 கோடி வசூலைத் பிளான் போடும் சிவகார்த்திகேயன்..! அதற்காக சர்ச்சை இயக்குனருடன் கூட்டணியா..?

பிரபல தனியார் தொலைக்காட்சியில்  சிறந்த நடிகராக அறிமுகமாகி தற்போது தன்னுடைய திறமையின் மூலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவ்வாறு பிரபலமான நமது நடிகரின் திரைப்படங்கள் பொதுவாக இளசுகள் மட்டுமில்லாமல் இல்லத்தரசிகளும் பார்க்கும் வகையில் அமைவது வழக்கம்.

இந்நிலையில் தொடர்ந்து குடும்பபாங்கான கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் முதன்முதலாக காலேஜ் லைஃப் பற்றிய திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கிய இந்த டான் திரைப்படமானது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இவ்வாறு இந்த வெற்றிக்கு பிறகாக நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த திரைப்படமான அயலான் என்ற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜான் அஸ்வின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கமிட்டாகி உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இயக்குனர் மிஷ்கினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இயக்குனர் மிஷ்கின் அஞ்சாதே, முகமூடி, துப்பறிவாளன், போன்ற வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர். அந்த வகையில் இவர் மேடையில் வார்த்தையை தவறாக பேசி பல சர்ச்சைகளுக்கு ஆளாகியது மட்டுமில்லாமல் தற்போது இவருடைய திரைப்படங்களில் நடிக்க பல்வேறு நடிகர்களும் தயங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

mishkin-1
mishkin-1

இருந்தாலும் ஒரு சில தைரியமான பிரபலங்கள் மட்டுமே இவருடைய திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது பிசாசு இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளார். இது ஒரு பக்கமிருக்க மிஸ்கின் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என் நிலையில்  சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இந்த திரைப்படத்தில் நடித்தால் மிக பிரமாண்டமாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தூண்டும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment