சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை முதல் நாள் எவ்வளவு வசூல் தெரியுமா.?

0

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்கள் இடத்தை பிடித்து விட்டார், இவர் முதன்முதலில் சின்னத்திரையில் தான் அறிமுகமானார் அதன் பிறகு படிப்படியாக தனது விடா முயற்சியால் வெள்ளித்திரையில் தனக்கான இடத்தை பிடித்து விட்டார்.

இந்த நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை, இது திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப கதையாக உருவாகியுள்ளது, அதனால் படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் கிராமப்புறங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்ணன் தங்கையின் பாசத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் ஆகா ஓகோ என்று பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் முதல் நாள் வசூல் விவரம் என்ன என்று தெரியவந்துள்ளது, சென்னையில் மட்டும் முதல் நாளில் 58 லட்சம் வசூல் ஆகியுள்ளது.