சிவகார்த்திகேயனின் திரை பயணத்திலேயே இதுதான் பெஸ்ட்.! நம்ம வீட்டுப் பிள்ளை வசூல் விவரம் இதோ.!

0

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகிய திரைப்படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

நம்ம வீட்டுப் பிள்ளை தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் இதற்கு அடுத்த இடத்தில் வேலைக்காரன், ரெமோ  திரைப்படங்கள் இருக்கின்றன, சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய சுமாரான திரைப்படங்களை தொடர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றி அடைந்துள்ளது, இதனால் சிவகார்த்திகேயன் மீண்டும் தனக்கான இடத்தை பிடித்து விட்டார் என கூறுகிறார்கள்.