சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.!

0

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார், இவர் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மனுவேல் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார், டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாண்டிராஜ் திரைப்படம் என்றாலே காமெடி கண்டிப்பாக இருக்கும் அதனால் எந்த திரைப்படத்திலும் காமெடி நடிகர்களாக யோகிபாபு மற்றும் சூரி நடித்துள்ளார்கள், படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எப்ப இருக்கிறது அதனால் மிக பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் சன் பிக்சர் நிறுவனம் தான் வெளியிட்டது அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரல் ஆனது, இந்த நிலையில் படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான எங்க அண்ணன் பாடலை வருகின்ற 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள் என சன் பிக்சர் நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டரில் அறிவித்திருந்தது.

இந்தப் பாடலை விக்னேஷ் வந்தான் எழுதியுள்ளார், நகாஷ் அசிஸ் சுனிதி சவுகான் ஆகியோர் பாடியுள்ளார்கள்.  இந்த பாடல் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.