அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல சினிமாவை நம்பி அரசு வேலையை விட்ட சிவகார்த்திகேயன் பட நடிகர்.!

சினிமாவை பொறுத்தவரை நேரம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் அதுமட்டுமில்லாமல் கூட திறமையும் தேவை  அந்தவகையில் பல சினிமா நடிகர்கள் தங்களுடைய திறமையை வைத்து முன்னேறி உள்ளார்கள். அதேபோல் சினிமாவை வாழ்க்கை என பல துணை நடிகர்கள் சினிமாவை நம்பி வந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நாம்  பார்த்துள்ளோம்.

அதிலும் கொரோனா வந்ததிலிருந்து பலரும் தவித்து வருகிறார்கள் கொரோனாவாள் சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சினிமாவில் நடித்து வரும் துணை நடிகர்களுக்கு தான் மிகவும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா ஊரடங்கு அறிவித்ததும்  சினிமா படப்பிடிப்புகள் துணை நடிகர்களின் வாழ்வாதாரம் பெரிதாக பாதித்தது.

கொரோனா வந்ததிலிருந்து ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் பொருளாதாரத்தை இழந்து தனது குடும்பம் வறுமையில் வாடி வருவதாக பலரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் கந்தசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகிய பூ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மைனா, புலிகுத்தி பாண்டி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது கொரோனா  வந்ததற்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வறுமையில் வாடி வருவதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய நடிப்பிற்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரமும் அரசு உதவிகள் கிடைக்கவில்லை நடிகர்களுக்கு நிவாரண உதவி அரசு அளிக்க வேண்டும்.

என்னைப் போன்ற கலைஞர்கள் பலபேர் கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள் எனக் கூறி உள்ளார்  மேலும் கந்தசாமி ஆரம்பத்தில் வங்கியில் வேலை செய்து வந்ததாகவும் பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த காமெடி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அதனால்தான் வேலையை விட்டதாகவும் கூறியுள்ளார் கடைசியாக இவர் நயன்தாராவின் o2 திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் விழாவில் பங்கேற்றபோது சிவகார்த்திகேயன் வந்தார் அப்பொழுது அவரைப் பார்த்து வணக்கம் சொல்லியுள்ளார் உடனே சிவகார்த்திகேயன் அண்ணா எப்படி இருக்கீங்க எனக் கேட்டதாகவும் அவருடைய பண்பை மிகவும் மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அமைய வேண்டுமென காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

kandhasamy
kandhasamy

Leave a Comment