சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட சிவகார்த்திகேயன்.! ஆத்தாடி லிஸ்டில் இத்தனை படம் இருக்கா.?

தமிழ் சினிமாவில் நடிக்க வந்து குறைந்த ஆண்டுகளில் முன்னணி நடிகராக வளர்ந்திருக்க கூடியவர்தான் சிவகார்த்திகேயன். இவர் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதே சமயத்தில் நிறைய வெற்றிப் படங்களைத் தவற விட்டிருக்கிறார். அப்படி சிவகார்த்திகேயன் தவறவிட்ட திரைப்படங்களில் தற்போது நாம் பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் அவர்கள் கதாநாயகனாக நடித்து முதலில் வெளியான திரைப்படம் மெரினா, ஆனால் அந்தப் படத்திற்கு முன்னாடியே குரல் 786, என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை இயக்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன், பாதி ஷூட்டிங் முடிந்த பின் ஒரு சில காரணத்தால் இந்த படத்தை அப்படியே நிறுத்தி விட்டார்கள். அதன்பிறகு ஏகன் திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோலில்  நடித்திருந்தார் ஆனால் படம் ரிலீஸ் ஆகும்போது அவர் நடித்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும் அட்லீயும் ரொம்பவே நெருங்கிய நண்பர்கள் அதுமட்டுமின்றி ஏற்கனவே அட்லீ இயக்கிய முகப்புத்தகம் என்ற குறும்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அட்லீ ராஜா ராணி படத்தினுடைய கதையை முதல் முதலாக சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கும் இந்த படத்தின் கதை ரொம்பவே பிடித்துள்ளது. இந்த படத்தில் அவர் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருந்தார்  ஆனால் இந்த திரைப் படத்தில் நடிக்காமல் போனது அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது, ஒன்று பிரவுடிச்சர் நல்ல தெரிந்த முகமாக வேண்டும் என சொல்லிவிட்டு சிவகார்த்திக் எனக்கு பதிலாக ஜெய்யை கமிட் பண்னியதாக கூறப்படுகிறார்கள். இன்னொரு காரணம் என்னவென்றால் இந்தப் படத்தில் கமிட் ஆகியிருந்த சந்தானம்  சிவகார்த்திகேயன் நடித்த நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியதால் வேற வழியில்லாமல் ஜெய் இந்த படத்தில் கமிட் பண்ண தாக கூறப்படுகிறார்கள். இதில் எந்த காரணம் உண்மை என்று யாருக்கும் தெரியவில்லை.

sivakarthikeyan
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தவறவிட்ட அடுத்த திரைப்படம் என்னவென்றால் மிர்ச்சி சிவா ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை, இந்த திரைப்படத்திலும் ஆரம்பத்தில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் அவர்கள் தான் அதன்பின் ஒரு சில காரணத்தால் மிர்ச்சி சிவாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 18 கீழ் 9 இத்திரைப்படத்தில் ஸ்ரீ கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இந்த படத்திலும் முதலாக நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் அவர்கள்தான் கடைசி நேரத்தில் இந்தப்படமும் அவருடைய கையைவிட்டு போகியது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் விக்ராந்த் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தானாம் அதன் பிறகு இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விக்ராந்த் அவர்கள் கமிட்டாகி இருந்தார்.

சிவகார்த்திகேயன் தவறவிட்ட மெகா ஹிட் திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். இதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் அவர்கள்  பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, என்ற இரண்டு படங்களிலும் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் மூன்றாவதாக இவர்கள் இணைய இருந்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். ஆனால் அப்போது ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாட்டால் அந்த படத்தில் நடிகர் கார்த்திக் கழிக்க வேண்டியதாக போய்விட்டது.

திரும்பவும் இந்த கூட்டணி நம்ம வீட்டுப் பிள்ளையில் இணைந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து உள்ளார்கள் இருந்தாலும் கடைக்குட்டிசிங்கம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. அந்தப்படத்தை சிவகார்த்திகேயன்  தவற விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment