தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு பல புது நடிகைகள் நுழைகிறார்கள் ஆனால் அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு சில வருடங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் தான் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்கள் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பல நடிகைகள் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போயுள்ளார்கள். தாமிரபரணி படத்தில் நடித்த பானு முதல் ஸ்ரீதிவ்யா வரை பல நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
அந்த வகையில் 2012ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மனம் கொத்தி பரவை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா இவர் மனங்கொத்தி பறவை திரைப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் கூட்டத்தை பெற்றார், இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை, அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன்பின்பு 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் அமீபா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் 2017ம் ஆண்டு ராஜாவும் 5 கூஜாவும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அவர் நடித்த எந்த திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியைப் பெறாததால் அதன் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.
