எங்க அப்பா வந்துட்டாரு என துள்ளி குதிக்கும் சிவகார்த்திகேயன்.! அதுக்குள்ள 18 வருஷம் ஆயிடுச்சு.

0

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் பிரபலமடைந்த அனைவராலும் சினிமாவில் சாதிக்க முடியாது.இந்நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் தனது கேரியரை தொடங்கி இதன் மூலம் நீண்ட காலம் தொகுப்பாளராக பணியாற்றி வந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தற்போது இவர் தவிர்க்கமுடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நிறைந்த திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் சமீப காலங்களாக ஆக்சன் திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்.

இவ்வாறு தனது விடாமுயற்சியினால் சினிமாவில் வளர்ந்துள்ள இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இவ்வாறு பிஸியாக இருந்து வரும் இவரின் குடும்பத்திலுள்ள மனைவி முதல் மகள் வரை அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அவர்கள்.

shivakarthikeyan 1
shivakarthikeyan 1

அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனது மாமா மகளை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியர்களுக்கு ஆதாரனா என்ற மகள் உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

shivakarthikeyan 2
shivakarthikeyan 2

ஆதாரனா யார் இந்த தேவதை பாடலை பாடி பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர். அதோடு ஏராளமான அவார்டு பங்ஷனில் கலந்து கொண்டுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே சிவகார்த்திகேயன் 18 வருடங்கள் கழித்து என் அப்பா என் விரல் பிடிக்கிறார் என் மகனாக.. என் பல வருட வலி போக்க தன் உயிர் வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி.. அம்மாவும் குழந்தையும் நலம் என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.