விவாகரத்து நடிகையுடன் இரண்டாவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன் – இயக்குனர் யார் தெரியுமா.?

நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில்  காமெடி அதிகம், கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் சென்டிமென்ட் கலந்த திரைப்படங்களே அவர் நடிப்பதால் அவரது படங்கள் எப்போதுமே சூப்பர் டூப்பர் ஹிட். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை எதிர்நீச்சல் மான்கராத்தே ரெமோ போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெறுவதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்காத வசூல் வேட்டை நடத்தியது.

சிவகார்த்திகேயன் நடிப்பில்  கடைசியாக  டாக்டர் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இத்தி ரைப்படம் வெளியாகி மக்களை மகிழ்வித்தோடு மட்டுமல்லாமல்  மட்டுமல்லாமல் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனைப் படைத்தது அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் சந்தோஷத்துடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் கையில் இப்பொழுது டான், அயாலன், சிங்க பாதை மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் யோகிபாபு வைத்து மண்டேலா படத்தை இயக்கிய அஸ்மின் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார்.

அந்த படத்தில் விவாகரத்து பெற்ற நடிகையான சமந்தா ஹீரோயின்னாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. ஏற்கனவே  சிவகார்த்திகேயனும் சமந்தாவும் இணைந்து 2018 ஆம் ஆண்டு சீமராஜா என்ற திரைப்படத்தில் நடித்தனர்.

இந்த படத்தில் இவரது காம்பினேஷன் சிறப்பாக இருந்தாலும் வெற்றியை படம் ருசிக்காமல் போனது அதனை தொடர்ந்து இப்போது இருவரும் இரண்டாவது முறையாக இணையும் உள்ளதால் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி வருகின்றனர் இந்த படம் காமெடி, காதல் மற்றும் சமூக அக்கறை கலந்த படமாக இது உருவாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment