அசால்டாக அவதார் டீம் உடன் கூட்டணி வைத்த சிவகார்த்திகேயன்..! உருட்றதுக்கும் ஒரு அளவு இருக்கு..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாபெரும் வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இதற்கான காரணம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அனைவருக்கும் தெரிந்து விட்டது.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் என்ற திரைப்படம் உருவாகி வருகின்ற நிலையில் இவர் நடிப்பில் உருவாகிய மற்றொரு திரைப்படம் ஆன அயலான் என்ற திரைப்படம் வெகு நாளாக கிடைப்பில் போடப்பட்டுள்ளது இந்த திரைப்படம் டாக்டர் திரைப்படம் உருவாகுவதற்கு முன்பாகவே உருவான நிலையில் இவை எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் மூன்று திரைப்படங்கள் வெளியாகிவிட்டது.

ஆனால் அயலான் என்ற திரைப்படம் மட்டும் என்றும் வெளியாகவில்லை மேலும் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பட்ஜெட் அதிகமானதால் நிதி நெருக்கடி ஏற்பட்ட காரணத்தினால் தான் இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ஏலியனாக நடிப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள்  மிகவும் தாமதமாக இருந்த காரணத்தினால் தற்பொழுது அவதார் 2 திரைப்படத்தின் கிராபிக்ஸ் டீம் ஆனது தற்பொழுது அயலான் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே திரைப்படம் நிதி நெருக்கடியின் காரணமாக படப்பிடிப்புகள் தள்ளி கொண்டே போய்க்கொண்டிருக்கிறது இந்நிலையில் இவர்கள் அவதார்  டீமை வைத்து கிராபிக்ஸ் செய்கிறார்கள் என்றால் இவையெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு ப்ரோமோஷன்காக இப்படி எல்லாம் உருட்டுவதா என நெட்டிசங்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.