லியோ விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் சிவகார்த்திகேயன்.! வெளிவந்த மாஸ் அப்டேட்..

சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு டான்ஸ், மிமிக்ரி என பணியாற்றி வந்த இவருக்கு தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றார்.

இதன் மூலம் தன்னுடைய கலகலப்பான பேச்சுத் திறமையை வெளிப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான நிலையில் பிறகு நடிகராக சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் மேலும் தற்பொழுது இவர் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.

தற்பொழுது இவருடைய நடிப்பில் மாவீரன் திரைப்படம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளிவந்த டான், பிரின்ஸ் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. அந்த வகையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் இதனை அடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான படம் தான் பிரின்ஸ் இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்றது. எனவே தற்பொழுது இவர் மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க பிறகு மிஷ்கின், சாதிதா, யோகி பாபு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ படத்தை உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் அந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் விரைவில் ‘எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு பூஜை விரைவில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ‘எஸ்கே 21’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்களாம் இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய லியோ டீம்மிடம் ‘எஸ்கே 21’ படக்குழு சில ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment