sivakarthikeyan : ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இவர் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்பொழுது தன்னுடைய twitter கணக்கில் ஏ ஆர் முருகதாஸ் பொக்கே கொடுப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு படத்தை உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய கஜினி, ஹிந்தி ரீமேக் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஷாருக்கானை வைத்து ஏ ஆர் முருகதாஸ் ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் அதற்கான கதையையும் ஷாருக்கான் இடம் கூறியுள்ளார் ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் கைகூடவில்லை அதனால் முருகதாஸ் வேறொரு திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இந்த நிலையில் ஷாருக்கான் நடிக்க முடியாமல் போன அந்த கதையில் ஏ ஆர் முருகதாஸ் தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து இயக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது படத்தை ஹிந்தி ரசிகர்களை கவரும் வகையில் ஏ ஆர் முருகதாஸ் கதை எழுதி இருந்ததால் கதையில் சில மாற்றங்கள் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
படத்தில் நடிகை நடிகர்கள் யார் என்பதை விரைவில் பட குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அருண் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் ப்ராஜெக்ட் 2024 இல் தொடங்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தில் மிருனாள் தாக்கூர் நடிகையாக நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அனிருத் ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்திற்கு மூன்றாவது முறையாகவும் சிவகார்த்திகேயனுக்கு எட்டாவது முறையாகவும் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
