தொடர்ந்து சிவகார்த்திகேயன் கதாநாயகிகளை குறிவைத்து தூக்கும் பிரபல முன்னணி நடிகர்..! யார் தெரியுமா.?

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். இந்த  திரைபடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மேலும் இந்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் அவர் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அவரது சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

priyanka mohan

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார். தற்போது  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 169 என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு  ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சமூக வலைத்தளத்தில் வரவில்லை.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் மாதேஸ்வரன் இயக்கத்தின் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  இயக்குனர் ராக்கி ,சாணி காயிதம்  போன்ற திரைப்படங்களில் இயக்கியுள்ளார்.

dhanush

Leave a Comment

Exit mobile version