புதிய லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயன்.! இணையத்தில் வெளிவந்த அவர் நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த இவருக்கு திரைப்படங்களில் துணைகதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதனை நழுவ விடாமல் நடித்து அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் என்று கூட கூறலாம்.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் காலேஜ் படிக்கும் மாணவன் போல் நடித்து மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து பார்த்தால் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை என்பது மட்டும் தெரியும் மேலும் படமும் கலவையான விமர்சனத்தையே பெற்று வந்தது தற்பொழுது இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படத்தை தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எப்படி நடித்துள்ளார் அவரது நடிப்பை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக ரசிகர்கள் இருக்கிறார்கள் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ஏற்கனவே இவர் இயக்கிய ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது அதேபோல் தான் மாவீரன் திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல சினிமா பிரபலங்களும் பல வகையான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தார்கள் அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை இந்த திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமே தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டு சாமி கும்பிடுவது போல் தெரிகிறது மேலும் இதனை இவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment