பள்ளி மாணவிக்கு உதவிய சிவகார்த்திகேயன் !! இன்னொரு அனிதாவை தவிர்த்தார் !! மற்ற நடிகர், நடிகைகளும் இப்படி செய்யலாமே!! பாராட்டும் ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம்..

0

sivakarthikeyan helps a poor student to get her dream fulfill photo viral: சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் இவரது உதவியால் ஒரு மாணவி தனது கனவை நினைவாக்கி கொண்டார்.

தஞ்சாவூரை சேர்ந்த சஹானா என்ற ஒரு மாணவி பத்தாம் வகுப்பு படிக்கும்போது 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் தற்போது இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

மேற்படி படிக்க வைப்பதற்கு அவரது குடும்பத்தினரால் ஒன்றும் பண்ண முடியவில்லை ஏனென்றால் அவரது அப்பா அம்மாவும் கூலி வேலைக்கு போகும் நபர்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்த மாணவி மருத்துவப் படிப்பு  படிக்க ஆசைப்பட்டதால் நீட் தேர்வில் பயிற்சியில் படிக்க நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்திருந்தார்.

மேலும் நீட் தேர்வில் சஹானா பாஸ் ஆகி விட்டார். இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் எனது மருத்துவ படிப்பிற்காக முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறார் என்று மாணவி  கூறியிருக்கிறார்.

மேலும் அரசு பள்ளியில் மாணவர்களுக்காக முதலமைச்சர் ஒதுக்கிய சலுகைகளுக்கும் இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

sahana
sahana